பச்சிளங்குழந்தையை பிளாஸ்டிக் பையில் அடைத்து வீசிய தாய்: கடித்து குதறிய தெரு நாய்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்டிருந்த பச்சிளங்குழந்தையை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ள கொடூரமான சம்பவம் தைவானில் நடந்துள்ளது.

தைவானை சேர்ந்த 19 வயது சியாவோ மெய் என்கிற பெண் ஆன்லைனில் சந்தித்த 28 வயது இளைஞரை, கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

பணம் இல்லாமல் வறுமையில் சிரமப்பட்டு வந்த தம்பதியினருக்கு அக்டோபர் 8ம் திகதியன்று அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

அதன்பிறகு இருவரும் மாயமாகி மத்திய தைவானுக்கு தப்பியோடியுள்ளனர். சில நாட்களாகவே அவர்களை பார்க்க முடியாததால் சியாவோவின் நண்பர்கள் சிலர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார் இந்த வார ஆரம்பத்தில் இருவரையும் கண்டுபிடித்தனர். அப்போது அவர்களிடம் குழந்தை குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அந்த தம்பதியினர், குழந்தை பிறந்த உடனே பிளாஸ்டிக் பையில் அடைத்து புதர்கள் நிறைந்த பகுதியில் தூக்கி எறிந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிஸார், அவர்கள் கூறிய இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பொலிஸாருக்கு குழந்தையின் சில எலும்புகள் மட்டுமே கிடைத்துள்ளது.

அதனை கைப்பற்றியிருக்கும் பொலிஸார், குழந்தை உயிருடன் தூக்கி வீசப்பட்டதா அல்லது கொலை செய்து தூக்கி வீசப்பட்டதா என்பது குறித்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த தெரு நாய்கள் குழந்தையின் உடலை கடித்து குதறியிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்