இந்தியாவே எதிர்பார்த்த அயோத்தி வழக்கிற்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு விருந்து! எங்கு தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

இந்தியாவே எதிர்பார்த்த அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இரவு விருந்து அளிக்க திட்டமிட்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

அதில் நிலம் இந்துக்களுக்கே சொந்தம், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் எஸ்ஏ பாப்தே, அசோக் பூஷண், டிஒய் சந்திரசூட் மற்றும் எஸ்ஏ நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்த வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ஆம் திகதி துவங்கி தொடர்ந்து 40 நாட்களாக மேற்கொண்டது.

இதையடுத்து, கடந்த அக்டோபர் 17-ஆம் திகதி விசாரணையை நிறைவு செய்து, திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்த அரசியல் சாசன அமர்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 1,045 பக்க தீர்ப்பை இன்று வழங்கியது.

எனவே, இந்த கடுமையான பணிச் சூழலில் இருந்து அயோத்தி வழக்கு அரசியல் சாசன அமர்வு நீதிபதிகளுக்கு சிறிய ஓய்வு அளிக்கும் நோக்கத்தில் அவர்களுக்கு இரவு விருந்து அளிக்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்த விருந்து டில்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் அளிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்