ஒட்டு மொத்த நாடே எதிர்பார்த்த அயோத்தி வழக்கிற்கு தீர்ப்பு எழுதியது யார்? வரலாற்றில் அரிதான நிகழ்வு

Report Print Santhan in இந்தியா

இந்தியாவே எதிர்பார்த்த அயோத்தி வழக்கில் தீர்ப்பை எழுதியது யார் என்று பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், அதைப் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

அயோத்தி நில விவகாரம் தொடர்ந்து ஒட்டு மொத்த நாடே உற்று நோக்கிய நிலையில், உச்ச நீதிமன்றம், குறித்த நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை ஒருமித்த கருத்துடன் வழங்கியது.

மொத்தம் 1045 பக்கங்கள் அடங்கிய இந்த தீர்ப்பில் ஒரு முக்கியமான அம்சம் ஒன்று தென்பட்டுள்ளது. அதில் இந்த தீர்ப்பை எழுதிய நீதிபதி யார் என்பது குறித்து குறிப்பிடவில்லை.

பொதுவாகவே உச்சநீதிமன்றத்தில் ஒரு அமர்வு தீர்ப்பை வழங்கினால், அந்த தீர்ப்பை எழுதியவர் யார் என்பது தொடர்பாக குறிப்பு இருக்கும்.

ஆனால், அயோத்தி வழக்கை பொறுத் வரை ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த கருத்து அடிப்படையில் தீர்ப்பு வழங்கியதாக தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

இதனால் இயல்பாகவே இந்த தீர்ப்பை யார் எழுதினார்கள் என்ற அம்சம் இடம்பெற்றிருக்கும் என்று சட்ட வல்லுநர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை.

இந்த அமர்வில் ரஞ்சன் கோகாய் தவிர, தலைமை நீதிபதியாகப் போகும், எஸ்.எஸ்.போப்டே, நீதிபதிகள், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதுபற்றி, சட்ட வல்லுனர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து, தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் எதற்காக தீர்ப்பு எழுதிய நீதிபதியின் பெயர் இடம்பெறவில்லை என்பது இதுவரை தெரியவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்