திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை! நள்ளிரவில் கணவனை பார்த்து அலறி துடித்த 25 வயது மனைவி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான இளைஞர் நள்ளிரவில் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திண்டிவனத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (27). இவருக்கும் சுபஸ்ரீ (25) என்பவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.

ஆனால் குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சரண்ராஜ், சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அவர் சாப்பிட்டு விட்டு மனைவியுடன் தூங்கினார். நள்ளிரவு 1 மணிக்கு எழுந்த சரண்ராஜ், வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் கண்விழித்து பார்த்த சுபஸ்ரீ, கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கத்தி கதறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொலிசார் சரண்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சுபஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் 1 மணி வரை சரண்ராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

இதனால் கோபமடைந்த அவர் உறவினர்கள் மருத்துவமனைக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் அவர்களை சமாதானம் செய்து சடலத்தை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் சரண்ராஜ் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்