வீட்டில் மூடப்பட்ட குழி மீது படுத்து கொண்ட நாய்.. அங்கு மாடு புதைப்பட்டிருக்கும் என தோண்டிய போது காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவரை கொன்று புதைத்த இளம்பெண், தனது குழந்தையையும் கொன்றுவிட்டு விஷம் அருந்திய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கேரள மாநிலத்தின் புத்தடியில் சுற்றுலா பயணிகள் தங்கிச் செல்லும் மஸ்ரூம் ஹட்ஸ் என்ற பண்ணை வீடு உள்ளது.

இங்கு உள்ள கால் நடைகளை கவனித்து வந்தவர் ரிஜோஸ். இவரது மனைவி லிஜி அங்கு தோட்டவேலைகளை கவனித்து வந்தார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 31ம் திகதி முதல் ரிஜோசை காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

பொலிசாரின் விசாரணையில் தனது கணவர் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக லிஜி தெரிவித்துள்ளார்.

அந்த எண் குறித்து விசாரித்த போது அது பண்ணை வீட்டின் மேலாளர் வாசிம் என்பவரின் நண்பரது எண் என்றும், வாசிம் போன் செய்யக் கூறியதால் லிஜியின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியதாகவும் அந்த நபர் தெரிவித்தார்.

இந்த நிலையில் காவல் துறையினரின் பிடி இறுகுவதை உணர்ந்த லிஜி கடந்த 4 ம் திகதி திடீரென மாயமானார். பண்ணை வீட்டின் மேலாளர் வாசிமும் மாயமானார். இதையடுத்து பொலிசாருக்கு சந்தேகம் வலுத்தது. மஸ்ரூம் ஹட்ஸ் பண்ணை வீட்டின் பூட்டை உடைந்தது உள்ளே புகுந்து காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் சமீபத்தில் குழி தோண்டி மூடப்பட்ட பகுதியில் முளைத்திருந்த புற்கள் மீது மோப்ப நாய் படுத்துக் கொண்டது.

இதையடுத்து ஜேசிபியை வரவழைத்து தோண்டிப்பார்த்தனர் காவல்துறையினர். அதில் அங்கு ரிஜேஸ் புதைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்த பொலிசார் சடலத்தை மீட்டனர்.

இதனிடையில் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் வாசிம் தகவல் ஒன்றை அனுப்பினார்.

அதில் ரிஜோஸை கொன்று புதைத்தது தான் மட்டுமே என்றும் இதில் வேறு யாருக்கும் தொடர்பில்லை என்பது போல ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த போது ரிஜோஸ் கொலை குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

பண்ணை வீட்டு மேலாளர் வாசிமுக்கும், ரிஜோஸின் மனைவி லிஜிக்கும் தவறான தொடர்பு இருந்துள்ளது. இது ரிஜோசுக்கு தெரிய வந்ததும், அவர் மனைவி லிஜியை கண்டித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த லிஜி மற்றும் வாசிம் ஆகியோர் ரிஜோசுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.

இதில் ரிஜோஷ் உயிரிழந்தை தொடர்ந்து. சடலத்தை ஒரு பகுதியில் மறைத்து வைத்துள்ளனர். காலையில் தோட்டத்தில் மாடு ஒன்று உயிரிழந்து விட்டதாக கூறி மாட்டை புதைக்க ஜேசிபியை வரவழைத்து குழி தோண்டி உள்ளனர்.

மூட்டையில் கட்டப்பட்டிருந்த ரிஜோஷின் சடலத்தை உயிரிழந்த மாட்டின் உடல் என்று குழிக்குள் போட்டு புதைத்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து பொலிசார் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், ரிஜோஷின் மனைவி லிஜி, தனது இரண்டு வயது மகள் ஜோவனா, காதலன் வசிம் அப்துல் காதர் ஆகியோர் மும்பை பனவேலியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் விஷம் அருந்திய நிலையில் மகாராஷ்டிர பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதில் லிஜியின் குழந்தை ஜோவனா உயிரிழந்துவிட்டது.

விஷத்தை கொடுத்து குழந்தையை இருவரும் கொன்ற பின்னரே தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

கவலைக்கிடமான நிலையில் உள்ள லிஜிக்கும் அப்துல் காதருக்கும் மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இடுக்கி தனிப்படை பொலிசார் மும்பைக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்