திருமணத்திற்கு அரை மணி நேரம்... மணமகன் எடுத்த பகீர் முடிவு: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு அரை மணி நேரம் முன்பு மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் புறநகரில் அமைந்துள்ள திருமண மண்டபத்திலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஹைதராபாத்தின் புறநகரில் கொம்பல்லி கிராமத்தில் சந்தீப் என்ற இளைஞருக்கு இன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மென்பொருள் பொறியாளரான சந்தீப், சம்பவத்தின் போது தனியாக அறையில் இருந்துள்ளார். உறவினர்கள் விசாரித்ததற்கு முகஒப்பனை செய்துகொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் திருமணத்திற்கு குறித்த நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதை அறிந்த உறவினர்கள், மணமகன் இருந்த அறையை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மணமகன் சந்தீப் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தீப் தற்கொலை செய்து கொள்வதற்கான காரனம் என்ன என்பது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்களுக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்