கல்லூரி மாணவர் கொலை வழக்கு: விசாரணை அதிகாரிகளை அதிர வைத்த வாக்குமூலம்

Report Print Arbin Arbin in இந்தியா

சென்னை தாம்பரம் அருகே கல்லூரி மாணவன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி வாக்குமூலம் வெளியாகியுள்லது.

தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ். தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தமது நண்பர் விஜய்யின் குடியிருப்பில் செவ்வாய் கிழமை காலை சென்ற முகேஷ், நண்பருடன் சேர்ந்து தனியறையில் பேசிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது திடீரென்று துப்பாக்கி சத்தம் கேட்கவே, விஜய்யின் சகோதரர் பதறியடித்துக் கொண்டு சென்று பார்த்துள்ளார்.

அங்கே எந்தச் சலனமும் இல்லாமல் கையில் துப்பாக்கியுடன் விஜய் நின்றுள்ளார். அவரது சகோதரர் சுதாரிப்பதற்குள் விஜய் அங்கிருந்து தப்பித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பப்ஜி வீடியோ கேம் சண்டையால்தான் இக்கொலை நிகழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே தலைமறைவாக இருந்த விஜய், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் உண்மை பின்னணி வெளிவந்துள்ளன.

பெருமாட்டுநல்லூர் பகுதியில் ரவுடி கும்பல் இயங்கி வருகிறது. ரவுடி செல்வம் தலைமையிலான இந்தக் கும்பலில் விஜய் இணைந்து செயல்பட்டு வந்திருக்கிறார்.

இந்தக் கும்பலில் சேர சம்பவத்தன்று முகேஷை விஜய் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை அவர் மறுக்கவே வாக்குவாதத்தில் முகேஷை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார் விஜய்.

மேலும், முகேஷை சுட்டுக்கொன்ற துப்பாக்கியை தனது நண்பன் வீட்டில் பதுக்கிவைத்திருந்ததாக விஜய் தெரிவிக்க தற்போது அந்த துப்பாக்கியை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பொலிசாரை அதிரவைத்துள்ள இந்த வாக்குமூலம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்