அவரை சந்தித்த சில நிமிடங்களில் வாய்பேசாத பெண்ணுக்கு நடந்த ஆச்சரியம்! சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம்

Report Print Raju Raju in இந்தியா
1140Shares

தமிழகத்தில் திருமண விழாவில் பங்கேற்ற இரண்டு மாற்று திறனாளிகள் ஒரு சில நிமிடங்களிலேயே மனம் ஒத்து போன நிலையில் திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பகுடி பகுதியில் முத்துகருப்பையா திருமண மண்டபத்தில் ஒரு திருமணம் நடந்தது.

அந்த விழாவில் வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி ராமராஜன்(30) என்பவரும் நாகப்பட்டினத்தை சேர்ந்த வாய்பேசமுடியாத தேவி (27) என்ற பெண்ணும் கலந்து கொண்டனர்.

அப்போது திருமண மண்டபத்தில் இருவரும் எதார்த்தமாக சந்தித்தனர். இதையடுடுத்து இருவரும் அவர்களது பாஷையில் (சைகையில்) பேசிக்கொண்டனர்.

பின்னர் சில நிமிடங்களில் இருவருக்கும் மனம் ஒன்று சேர்ந்து திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இந்த விடயம் உறவினர்களுக்கு தெரியவந்ததையடுத்து ராமராஜன் - தேவி திருமணம் உடனடியாக பேசி முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இவர்களின் திருமணம் கறம்பகுடி முருகன் கோவிலில் இனிதே நடந்தது.

இந்த திருமணத்திற்கு வந்த உறவினர்கள், பலரும் சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்ட திருமணம் இது தான் என கூறி மணமக்களை மகிழ்ச்சியுடன் வாழ்த்தினார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்