இந்த மரத்தை தொட்டால் தீராத நோய்கள் குணமாகும்!... ஆயிரக்கணக்கில் குவியும் மக்கள்

Report Print Fathima Fathima in இந்தியா
136Shares

மத்திய பிரதேசத்தில் இலுப்பை மரத்தால் தொட்டால் நோய்கள் குணமாகும் என தகவல்கள் வெளியான நிலையில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

நயாஹான் கிராமத்தை ஒட்டியுள்ள சத்புரா வனப்பகுதி பெரிய புலிகளின் சரணாலயமாக இருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இங்கு சென்ற ரூப் சிங் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், தான் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இங்குள்ள இலுப்பை மரத்தை தொட்டவுடன் அனைத்தும் சரியாகி போனதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவியது.

இதனை தொடர்ந்து இலுப்பை மரத்தை தொடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.

மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களையும் சொந்த பந்தங்கள் அழைத்து வந்து மரத்தை தொட வைக்கிறார்களாம்.

இது தடை செய்யப்பட்ட பகுதி என்ற போதும் மக்கள் குவிவதால் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர் வனத்துறையினர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்