திருமணமான 10 நாளில் விதவையான புதுப்பெண்.. புதுமாப்பிள்ளைக்கு நிகழ்ந்த சோகம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான 10 நாளில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). இவருக்கும் கலைச்செல்வி (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் புதுமணத்தம்பதிகள் ராசிபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர். திருமணத்தை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்கள்.

அப்போது சாலை ஓரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.

இதில் தினேஷ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

அவரது மனைவி கலைசெல்விக்கு காலில் அடிபட்டதில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரித்து வரும் நிலையில் மணவாழ்க்கையை தொடங்கிய 10 நாளில் புதுமாப்பிள்ளை உயிரிழந்து அவர் மனைவி விதவையானது தம்பதியின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்