சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் அதிமுக நிர்வாகிக்கு ஜாமீன்

Report Print Vijay Amburore in இந்தியா

பதாகை விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், திமுக நிர்வாகி ஜெயகோபாலுக்கு நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ (23) என்கிற இளம்பெண் கடந்த செப்டம்பர் 12ம் திகதியன்று தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

சாலையில் அதிமுக நிர்வாகி ஜெயகோபால் வீட்டு திருமணத்திற்காக விதியை மீறி வைக்கப்பட்டிருந்த பதாகை திடீரென சுபஸ்ரீ மீது சரிந்தது.

இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த இளம்பெண் மீது வேகமாக லொறி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவமானது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், விதியை மீறி பதாகை வைத்த ஜெயகோபாலை பொலிஸார் கைது செய்தனர்.

இந்த நிலையில் அதிமுக நிர்வாகி ஜெயகோபாலுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் புற்றுநோய் மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்