சிறுவன் மூக்குக்குள் திடீரென நுழைந்தது என்ன? வலியால் துடித்தவனுக்கு நடத்திய பரிசோதனையில் தெரிந்த உண்மை

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் சிறுவனின் மூக்கிற்குள் சென்ற மீனை மருத்துவர்கள் பத்திரமாக அகற்றினார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் மண்ணவேளாம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அருள்குமார், ஏழாம் வகுப்பு படித்து வந்தான்.

அருள்குமார் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தனது நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தான்.

அப்போது தனது மூக்கிற்குள் ஏதோ செல்வதை உணர்ந்த அருள்குமார் வலியால் துடித்தபடி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளான்.

இதனை தொடர்ந்து அவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அருள்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் மூக்கிற்குள் சோதனை செய்தனர். அப்பொழுது உள்ளே ஏதோ ஒன்று இருப்பது போல் தெரிய வந்தது.

பின்னர் அவனுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மூக்கில் உயிருடன் இருந்த மீன் குஞ்சை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், குளிக்கும்போது அருள்குமாரின் மூக்குக்குள் மீன் சென்றுள்ளது.

இதையடுத்து துரிதமாக செயல்பட்டு மிகுந்த சிரமத்துக்கு இடையே மீனை வெளியில் எடுத்தோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்