மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் நடந்தது என்ன? திடுக்கிடும் தகவலை புட்டு புட்டு வைத்த தாயார்

Report Print Raju Raju in இந்தியா

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவர் தாய் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி, சென்னை ஐஐடியில் முதலாமாண்டு முதுகலை படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று விடுதி அறையில் பாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதே மாணவியின் தற்கொலைக்கு காரணமாக கூறப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து அவர் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறுதிச் சடங்குகள் முடிந்த பின்னர், மாணவியின் செல்போனை ஆராய்ந்த போது அதில், தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் என்பவர் தான் காரணம் என அவரது செல்போனில் ஆங்கிலத்தில் பதிந்து வைத்திருந்தார்.

மேலும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்த மாணவி, அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் அந்த பதிவில் கூறியிருந்தார்.

பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் தாயார் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், எங்களுக்கு பெண் பிள்ளையை கல்விக்கூடத்திற்கு வெளியூருக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது.

நாட்டில் நிலவி வரும் மதவெறுப்பின் காரணமாக எனது மகள், முக்காடு (சால்) அணிவதற்கு கூட வேண்டாமென மறுத்து விட்டோம்.

முதலில் அவளுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். வேண்டாம் மகளே என நான் மறுத்தேன். அதன்பின் தான் மெட்ராஸ் ஐஐடியில் படிக்க அனுப்பினோம்.

ஐஐடியில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

படிப்பில் நல்ல ஆர்வத்தோடு இருந்தவள். வேண்டுமெனில் ஐஐடி வளாகத்தில் விசாரித்து கொள்ளலாம்.

பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்து போயிருக்கிறாள். இந்தியாவின் சூழல் மாறிவருகிற காரணத்தினால் தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித் தான் நாங்கள் ஐஐடி மெட்ராஸில் படிக்க அனுப்பினோம்.

சுடிதார் பேண்டின் கயிறினை கட்டத் தெரியாத பெண் எனது மகள். காரணம் அது அவளை இறுக்கி வலியை உண்டாக்கும் எனச்சொல்வாள்.

18 வயதான பின்னும் அவளுக்கு அதனை இறுக்கமாக கட்டத்தெரியாத காரணத்தால் அவளுக்கு லெக்கின்சும், ஜீன்சும் வாங்கி கொடுத்தோம். அவளை தூக்குக் கயிறு நெரிப்பதை எப்படி எதிர் கொண்டாள் என்று தெரியவில்லையே?

நீதிமன்றத்தில் எனது மகளுக்கான நீதியை பெற்றே தீருவோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்