6 வயது சிறுவனுக்கு எமனான கொதிக்கும் சாம்பார் அண்டா: அலட்சியத்தால் பறிபோன உயிர்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் தனியார் பாடசாலை ஒன்றில் சாம்பார் அண்டாவுக்குள் தவறி விழுந்து 6 வயது சிறுவன் மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பான்யம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பாடசாலையிலேயே குறித்த 6 வயது சிறுவனுக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

புதனன்று மதிய உணவு வேளையில், 6 வயதான புருசோத்தம் ரெட்டி கொதிக்கும் சாம்பார் அண்டாவில் தவறி விழுந்துள்ளார்.

உடனடியாக பாடசாலை நிர்வாகிகள், சிறௌவனை மீட்டு அடுத்துள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ப்பித்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து மாவட்ட பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மாவட்ட மருத்துவமனையில் வைத்து சிறுவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

உணவுக்காக வரிசையில் நின்ற சிறார்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், சிறுவன் புசோத்தம் ரெட்டி முன்னால் இருந்த கொதிக்கும் சாம்பார் அண்டாவுக்குள் சென்று விழுந்துள்ளான்.

இச்சம்பவத்தை கண்டித்து சிறுவனின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் பாடசாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாடசாலை நிர்வாகத்தின் அலட்சியம் மற்றும் கண்காணிப்பு இல்லாததால் அவரது மகன் இறந்துவிட்டதாக ஷியாம்சுந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பான்யம் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்