தண்டவாளத்தில் இருந்த மாணவர்கள் மீது ரெயில் மோதி விபத்து: 4 பேர் சம்பவயிடத்தில் பலி

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் கோவையில் ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 4 பேர் ரெயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விபத்தில் படுகாயத்துடன் மாணவர் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

மாணவர்கள் 5 பேரும் சூலூர் அருகே உள்ள ராவத்தூர்-முத்துகவுண்டன்புதூர் செல்லும் வழியில் அங்குள்ள தண்டவாளத்தில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.

இரவு 10.30 மணியளவில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது.

ரெயில் வருவதை மாணவர்கள் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் சித்திக் ராஜா (22), ராஜசேகர் (20). தேனி விக்னேஷ் (22), கருப்பசாமி, (24), கவுதம் (23) ஆகியோரில் நால்வர் ரெயில் மோதி சம்பவயிடத்தில் மரணமடைந்துள்ளனர்.

அவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் மது போத்தல்கள் காணப்பட்டதால், மாணவர்கள் அனைவரும் மது அருந்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்