இளம் தாயாரும் பிஞ்சு குழந்தையும் கிணற்றுக்குள் சடலமாக... கணவரின் தொலைபேசி அழைப்பால் சந்தேகம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளம் தாயாரும் பிஞ்சு குழந்தையும் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் கணவரையும் குடும்பத்தையும் கைது செய்து விசாரிக்க கோரி அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நிஜினா மற்றும் அவரது 8 மாதமேயான பிஞ்சு குழந்தையும் சடலமாக கிணற்றுக்குள் இருந்து மீட்டுள்ளனர்.

கணவரும் அவரது உறவினர்களும் சேர்ந்து கொலை செய்து கிணற்றில் வீசியிருக்கலாம் என நிஜினாவின் உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

வரதட்சினை தொடர்பில் கணவரின் குடும்பத்தினர் நிஜினாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.

திங்களன்று நிஜினாவும் குழந்தையும் கிராமத்திற்கு வந்தார்களா என கேட்டு சகோதரர் நிஜேஷுக்கு நிஜினாவின் கணவர் தொலைப்பேசியில் அழைத்ததே சந்தேகத்தை பலப்படுத்தியுள்ளது.

நிஜினா திருமணத்திற்கு பின்னர் இதுவரை பிறந்த வீட்டுக்கு தனியாக சென்றதில்லை என கூறப்படுகிறது.

இரவு கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதனால் அவர் பிறந்த வீட்டுக்கு சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனைடையே நிஜேஷ் தமது சகோதரிக்கு பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும், எந்த பலனும் இல்லாத நிலையில்,

அப்பகுதி பொதுமக்கள் நிஜினாவின் சடலம் கிணற்றில் கண்டெடுத்துள்ளதாக நிஜேஷிடம் அறிவித்துள்ளனர்.

நிஜேஷின் நண்பர்களே நிஜினாவின் சடலத்தை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் கணவரின் உறவினர்களோ கணவரோ எவரும் செல்லவில்லை எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்