தூக்கு கயிற்றில் உயிருக்கு போராடிய புதுப்பெண்... கணவனின் செயலால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

கல்பாக்கம் அருகே புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்பாக்கம் அருகே கடலூர் என்கிற கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி என்கிற சத்தியவாணி (25). இவருக்கும் ஆட்டோ டிரைவர் பாலையன் என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இருவரும் நந்தினியின் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று திடீரென நந்தினி தூக்கு கயிற்றில் உயிருக்கு போராடியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் வழியிலேயே சத்தியவாணி இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் உறவினர்கள் அனைவரும் பெரும் சோகத்தில் இருக்க, மனைவி இறந்தது பற்றி அறிந்த பாலையன் தப்பி ஓட்டம்பிடித்துள்ளார்.

இதனால் அவர் மீது உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சத்தியவாணியின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்