உணவில் எதையோ கலக்கிறார்கள் என கூறிய நிலையில் உண்ணாவிரதம் இருந்த முருகன்... தற்போது அவர் நிலை என்ன?

Report Print Raju Raju in இந்தியா

வேலூர் சிறையில் 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த முருகன் வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அதை கைவிட்டுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 18ஆம் திகதி முருகன் இருக்கும் அறையில் செல்போன் கிடைத்ததாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் ஆஜரான போது, எனக்கு பரோல் கிடைப்பதை தடுக்கத் தான் சிறை அதிகாரிகள் இப்படிச் செய்கிறார்கள் என குமுறினார்.

வேலூர் சிறையில் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால், சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றுமாறு சிறை அதிகாரிகளிடம் முருகன் மனு அளித்த நிலையில் அது ஏற்கபடாமல் இருந்ததால் அவர் கடந்த 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்தார்.

இந்த தகவலை அவர் வழக்கறிஞர் கூறியதோடு, முருகன் ஆன்மிக வாழ்க்கையைச் சிதைக்கும் வகையில் கடந்த சனி, ஞாயிறு அன்று கொடுத்த உணவில் எதையோ கலந்திருந்ததாக அவர் தன்னிடம் கூறியதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்நிலையில் வழக்கறிஞர்கள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து 6 நாட்களாக இருந்துவந்த உண்ணாவிரத போராட்டத்தை அவர் தற்போது கை விட்டுள்ளார்.

ஏற்கனவே கணவர் முருகனுக்கு சிறையில் கொடுமை நடப்பதாக கூறி அவர் மனைவி நளினி உண்ணாவிரதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்