குடிபோதையில் நண்பனை பலி கொடுத்த இருவர்..... ஒரு வைரல் வீடியோ!

Report Print Abisha in இந்தியா
410Shares

கார்நாடக மாநிலம், Kalaburagi என்ற மாவட்டத்தில், குட்டை ஒன்றில் குளிக்க சென்ற 3நண்பர்களில் ஒருவர் குடிபோதையில் நீரில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

வீடியோவின் துவக்கத்தில் மூன்று நண்பர்கள் இணைந்து குட்டையில் குளிக்க சென்றனர். அவர்கள் அருகில் சில பெண்கள் குளித்த கொண்டிருந்தனர். மூன்று நண்பர்களில் இருவர் கரையில் இருந்தபடி தண்ணீரில் விளையாட ஒருவர் மட்டும் கரையில் நின்றபடி அங்கு நடந்ததை வீடியோ எடுத்து கொண்டிருந்துள்ளார்.

அதில், ஒருவர் தண்ணீரில் குதித்து சிறிது தூரம் செல்கிறார். பின்னர் கரைக்கு மிகவும் அருகில் வந்து நீந்த முற்படுகிறார் இயலவில்லை. நீண்ட நேரம் நீச்சல் அடிக்க முயன்றும் முடியாமல் போக அந்த இளைஞர் கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறார்.

நீரில் மூழ்கும் நண்பன் கைக்கு எட்டும் தூரத்தில், இருக்க மற்றொருவர் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார். ஒருவர் வீடிாயோவை பதிவு செய்கிறார்.

இறுதியில் தண்ணீரில் மூழ்கியவர் நீண்ட நேரம் வெளியில் வராமல் போனபோதுதான் நண்பர்கள் இருவருக்கும் அவர் இறந்துவிட்டது தெரிய வந்துள்ளது.

இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், இறந்தவர் பெயர் ஜாஃபர் என்பதும். 19 வயதான இவர், குளிக்க செல்லும் முன் அப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியதும், இதனால் தன்னிலை மறந்து நண்பர்கள் இருவரும் ஜாஃபர் மூழ்குவதை வேடிக்கை பார்த்ததும் தெரிய வந்துள்ளது.

பின் தீயணைப்பு வீரர்கள், ஜாஃபின் உடலை மீட்டுள்ளனர். அவரது இரு நண்பர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்