மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம்! தனது செல்போனில் மாணவர்கள் குறித்து பதிவிட்டிருந்தது அம்பலம்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவை சேர்ந்த சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் புதிய தகவலாக மேலும் இரண்டு பேராசியர்கள் பெயரை செல்போனில் அவர் பதிவு செய்திருப்பதுடன், சில மாணவர்களுக்கு எதிரான விடயங்களையும் பதிவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்திப் என்ற மாணவி சென்னை ஐஐடியில் படித்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக மூன்று பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முக்கியமாக சுதர்சன் பத்பநாபன் என்ற பேராசிரியர் தான் தனது மரணத்துக்கு காரணம் என பாத்திமா பதிவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி மேலும் இரண்டு இரண்டு பேராசிரியர் பெயர்களையும் பாத்திமா தனது செல்போனில் பதிவாக எழுதி வைத்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இதோடு சில மாணவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு அவர்களுக்கு எதிரான விடயங்களையும் பாத்திமா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த பதிவில் என் பெற்றோரையும், சகோதரியையும் நான் அதிகம் நேசிக்கிறேன், நான் இருக்கும் இடத்தை வெறுக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாத்திமா தனது போனில், எந்தவொரு பாஸ்வேர்டும் வைக்காத நிலையில் அவர் போனில் சார்ஜ் இல்லாததால் சுவிட் ஆப்பில் இருந்தது.

பின்னர் சார்ஜ் போட்டு போனை ஆன் செய்த பின்னரே அவர் தற்கொலை தொடர்பாக எழுதியிருந்த பதிவுகள் வெளியாகி வருகிறது.

இந்த செல்போன் தற்போது நீதிமன்ற உத்தரவின் படி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பரிசோதனைக்கு பின்னர் அந்த செல்போனை முக்கிய ஆதாரமாக கொண்டு குற்றவியல் பொலிசார் தங்கள் விசாரணையை துரிதப்படுத்தவுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்