குற்றமிழைத்தவர்களே மீண்டும் ஆட்சிக்கு வருவதா.... தேர்தல் முடிவு குறித்து திருமாவளவன் வேதனை

Report Print Vijay Amburore in இந்தியா

இலங்கை தேர்தல் முடிவுகள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மிகுந்த வேதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே சகோதரரும், அந்நாட்டின் முன்னாள் ராணுவ மந்திரியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளருமான கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவரை எதிர்த்து போட்டியிட்ட இலங்கை முன்னாள் பிரதமர் பிரேமதாசாவின் மகனும், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளருமான சஜித் பிரேமதாசா 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகளை பெற்றிருந்தார்.

இலங்கை தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "இலங்கைத் தேர்தல் முடிவு மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இனப்படுகொலை குற்றமிழைத்தவர்களே மீண்டும் ஆட்சியதிகாரத்திற்கு வந்திருப்பது தமிழ்ச்சமூகத்திற்கு பெருந்தீங்கை உருவாக்கும். நீதி முற்றிலும் மறுக்கப்படும்".

"கடந்த பத்தாண்டுகளில் பன்னாட்டுப் புலனாய்வு விசாரணை நடத்தியிருந்தால் இராஜபக்சே குடும்பத்தினர் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். தேர்தலில் போட்டியிட்டிருக்க இயலாது. ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகம் தமிழர்களுக்கு நீதிகிட்ட ஒத்துழைக்க முன்வராதது பெரும் ஏமாற்றமே ஆகும்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Party wise Results