ராகுல் காந்தியுடன் இணைத்து பேசப்பட்ட பெண் எம்எல்ஏ... தன்னை விட வயதில் சிறியவரை மணக்கிறார்

Report Print Vijay Amburore in இந்தியா

காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ அதிதி சிங், வயதில் தன்னைவிட சிறிய பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரை திருமணம் செய்ய உள்ளார்.

ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், அகில இந்திய மகிளா காங்கிரஸ் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளருமான அதிதி சிங் (32), பிரியங்கா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர்.

இவர் பல்வேறு மேடைகளில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அருகே அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து, இருவருக்கும் இடையே திருமணம் நடைபெற இருப்பதாக வதந்திகள் பரவ ஆரம்பித்தன.

இதன் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்த அதிதி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது ஒருபுறமிருக்க, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கியதற்கு, அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அதிதி மட்டும் ஆதரவு தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

அதோடு, உத்தரப்பிரதேசத்தில் பாஜக நடத்திய சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்திலும் கலந்துகொண்டு கடும் விமர்சனத்திற்குள்ளானார்.

இப்படி பல சர்ச்சைகளில் சிக்கி பிரபலமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அதிதி, தன்னைவிட 3 வயது குறைந்தவரான பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அங்கத் சிங் சைனியை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

எதிர்வரும் நவம்பர் 21ம் திகதியன்று புதுதில்லியில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் நடைபெற உள்ளது. சைனி ஒரு சீக்கியர் மற்றும் அதிதி ஒரு இந்து என்பதால், இரு மத சடங்குகளின் அடிப்படையிலும் திருமணம் நடைபெற உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்