கணிசமான தமிழர்களால் வெற்றியடைந்த கோத்தபாய: சுப்பிரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்

Report Print Vijay Amburore in இந்தியா

தமிழர்களின் கணிசமான வாக்குகளாலே கோத்தபாய வெற்றியடைந்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கருத்து பதிவிட்டுள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே 13 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் ஆளும் மத்திய பாஜக அரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி, தமிழர்களின் கணிசமான வாக்குகளாலே கோத்தபாய வெற்றியடைந்திருப்பதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "மகிந்த ராஜபக்சவிடம் இருந்து, அவருடைய சகோதரர் கோத்தபாய ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்தது குறித்து தெரிவிக்க அழைப்பு வந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. அவர் பதியேற்கும் விழாவானது எதிர்வரும் 20ம் திகதியன்று நடைபெற உள்ளது. அவருக்கு நல்ல எண்ணிக்கையிலான தமிழர்கள் வாக்களித்துள்ளதாக தமிழ் ஊடகங்கள் என்னிடம் தெரிவித்தன" என பதிவிட்டார்.

அதற்கு ஒரு இணையதளவாசி, பதவி ஏற்பு விழாவில் நீங்கள் கலந்துகொள்வீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துள்ள சுப்பிரமணி சுவாமி, "தற்போது நாடாளுமன்ற அமர்வு நடைபெற்று வருகிறது. ஆனால் நீண்டகாலமாக துன்பப்படும் தமிழர்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும், சிங்கள-தமிழ் நட்பை உறுதி செய்வதற்கும் நான் பின்னர் கொழும்புக்குச் செல்வேன் என கூறியுள்ளார்.

மேலும் கணிசமான தமிழர்கள் கோத்தபாயவிற்கு வாக்களித்துள்ளனர் எனவும் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தமிழர்கள் குறித்து அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வரும் சுப்ரமணிய சுவாமிக்கு, தமிழக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்வினை ஆற்றி வருவதோடு, இணையளவாசிகளும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Party wise Results