என் பெற்றோர் மீது நடவடிக்கை எடுங்கள்! கணவருடன் சேர்ந்து இளம்பெண் பரபரப்பு புகார்

Report Print Fathima Fathima in இந்தியா

காதல் திருமணம் செய்து கொண்ட என்னையும், என் கணவரையும் சாதியை காட்டி என் பெற்றோர் பிரிக்க பார்க்கிறார்கள் எனவும், தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.

கரூரை சேர்ந்த சுந்தரராஜன் என்பவரின் மகள் சுருதி, இவரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜயன் என்பவரும் கடந்தாண்டு யூலை மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் வேறு வேறு சாதி என்பதால், சுருதியின் பெற்றோர் விஜயன் வீட்டுக்கு வந்து சண்டையிட்டதுடன் சுருதியை தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து சுருதியை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அங்கிருந்து தப்பி வந்த சுருதி விஜயன் வீட்டில் தஞ்சமடைந்தார்.

இந்நிலையில் இருவரும் சேர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

அதில், சாதியை காரணம் காட்டி தங்களை பிரித்துவிட்டதாகவும், தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு அளிக்க கோரியும் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்