சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி உயிருடன் புதைந்த ராணுவ வீரர்கள்: ராஜ்நாத் சிங் இரங்கல்

Report Print Basu in இந்தியா

உலகின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலியாகியுள்ளனர்.

திங்களன்று மதியம் 3:30 மணியளவில் சியாச்சின் பனிப்பாறையில் 16,500 அடி உயரத்தில் இக்கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்தன்று 6 ராணுவ வீரர்கள், 2 சுமை தூக்கும் ஊழியர்கள், ரோந்து பணியின் போது ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்லும் போது பனிச்சரிவில் சிக்கி புதைந்துள்ளனர்.

தகவலறிந்த ராணுவ படைகள் உடனே மீட்பு நடவடிக்கையை தொடங்கினர். பனிச்சரிவில் புதைந்த 8 பேரையும் வெளியே எடுத்துள்ளனர். இதில், 7 பேர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவக் குழு மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் அருகில் இருந்த ராணுவ மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும் நான்கு ராணுவ வீரர்கள், இரண்டு சுமை தூக்கும் ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சியாச்சினில் உயிரிழந்தவர்களுக்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் பதிவிட்டதாவது, சியாச்சினில் பனிச்சரிவு காரணமாக வீரர்கள் மற்றும் போர்ட்டர்களின் மறைவால் ஆழ்ந்த வேதனையில் உள்ளேன். அவர்களின் தைரியத்திற்கும் தேசத்துக்கான சேவைக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்