கல்வியும் உணவும் மறுக்கப்பட்ட மற்றொரு குழந்தை.... இந்த புகைப்படத்தின் உண்மை என்ன?

Report Print Abisha in இந்தியா

தொலுங்கான மாநிலத்தில், பசியுடன் ஒருபார்வை என்ற தலைப்பில் பத்திரிகை ஒன்றில் வெளியாக புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்ததுடன், தற்போது அதன் உண்மை தன்மை குறித்து வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தில், ஜந்து வயது சிறுமி ஒருவர் கையில் உணவு தட்டுடன், வகுப்பறை ஒன்றை எட்டிபார்க்கும் புகைப்படம் கடந்த 7ஆம் திகதி தெலுங்கு செய்திதாள் ஒன்றில் வெளியானது.

அந்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் பெற்று, குழந்தைகள் நல ஆர்வலர்கள் தங்களின் சமூகவலைதளங்களில் பகிர தொடங்கினர். அதில், கல்வியும் உணவும் மறுக்கப்பட்ட மற்றொரு குழந்தை என்று குறிப்பிட்டு பரவ துவங்கியது.

பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அந்த புகைப்படத்தால், அதில் இருந்த குழந்தை திவ்யா அடுத்த நாளே பள்ளியில் சேர்க்கப்பட்டாள்.

இது குறித்து தெரிவித்துள்ள குழந்தையின் தந்தை லக்ஷ்மணன். இது நியாயமற்றதாக தோன்றுகிறது. நான் அந்த புகைப்படத்தை பார்த்து பெரும் துயர் அடைந்தேன். திவ்யாவை தவிர எங்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பெரியவன் கல்லூரி படிக்க இருக்கிறான். மற்ற இருவரும் அரசு பள்ளியில் படிக்கின்றனர். என்று தெரிவித்துள்ளார்.

மேலும், திவ்யாவிற்கு 6வயது இருக்கும்போது பள்ளியில் சேர்க்க திட்டமிட்டிருத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் குடும்பம், அப்பகுதியில் உள்ள சேரியில் வசித்து வருகின்றது. மேலும், குப்பைகள் எடுக்கு பணிகள் செய்து மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிப்பதாக திவ்யாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

ஒரு புகைப்படம் பகிரும்போது அதை ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் என்பது இந்த நிகழ்வே சான்று...

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்