கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி 'சூப்பர் ஸ்டாராவோம்'? ரீல் தலைவர்களுக்கு மத்தியில் ரியல் தலைவர்!

Report Print Abisha in இந்தியா
122Shares

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராவேன் என்று கனவில் கூட நினைத்திருக்கமாட்டார் என்று நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்ததற்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் 60ஆண்டு கால திரை பயணத்தை கொண்டாடும் வகையில், பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது.

அதில், கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ரஜிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்சியில் பேசியர் ரஜினி, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகுவோம் என்று கனவில் கூட நினைத்திருக்கமாட்டார் என்றும். நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் அதிசயம் நடக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடில் ரஜினியை விமர்சனம் செய்துள்ளனர் அதிகமுவினர். அதில் ” கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி 'சூப்பர் ஸ்டாராவோம்' என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்

முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்