நித்யானந்தா ஆசிரமத்தில் என் இரு மகள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் - வழக்கு தொடர்ந்த தம்பதி

Report Print Abisha in இந்தியா

நித்யானந்தா ஆசிரமத்தில், அடைத்து வைக்கப்பட்டுள்ள இரு மகள்களையும் மீட்டு தரும்படி தம்பதியினர், குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரிலுள்ள நித்யானந்தாவுக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய தங்களது 4 மகள்களை கடந்த 2013ம் ஆண்டு சேர்த்ததாக கூறும் அந்த தம்பதியர், அவர்கள் நால்வரும் பெங்களூரிலிருந்து, அகமதாபாத்திலுள்ள கிளைக்கு மாற்றப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்ந்து மகள்களை பார்க்க அகமதாபாத் ஆசிரம ஊழியர்கள் அனுமதிக்காததால் போலீசாருடன் அங்கு சென்ற தம்பதியர், தங்களுடைய இளைய மகள்கள் இருவரை மட்டுமே மீட்க முடிந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூத்த மகள்கள் லோகமுத்ரா மற்றும் நந்திதா தங்களுடன் வர மறுத்து விட்டதாகவும், அவர்களை மீட்டுத் தரவேண்டும் எனவும் ஜனார்த்தனா ஷர்மா மற்றும் அவரது மனைவியும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

முன்னதாக சில காலமாகவே தொடர்ந்து, நித்யானந்தா மீது பெண்கள் புகார் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers