திருமணத்திற்கு கட்டிய பட்டு வேட்டியுடன் தற்கொலை செய்து கொண்ட புது மாப்பிள்ளை! தந்தையிடம் சொன்ன கண்ணீர் காரணம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் தன்னுடைய காதல் மனைவியை, அவரின் பெற்றோர் பிரித்துவிடுவார்கள் என்று எண்ணி புதுமாப்பிள்ளை ஒருவர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையத்தைச் சேர்ந்தவர் காளியப்பன். இவருக்கு தனுஷ்கோடி என்ற 19 வயது மகன் உள்ளார். தனுஷ்கோடிக்கும், நாமக்கல்லை சேர்ந்த பென்னி என்ற பெண்ணிற்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாற, கடந்த மாதம் பெண் வீட்டாரின் சம்மதத்துடன், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின் இருவரும் நாமக்கலில் தங்கியிருந்த நிலையில், இருவரும் கச்சிராப்பாளையத்திற்கு சென்றுள்ளனர், அதன் பின் பென்னியின் வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர்.

அங்கு தங்கியிருந்த போது, பென்னிக்கு உடல்நிலை சரியில்லாமல் போக தனுஷ் கோடி மட்டும் தன் ஊருக்கு திரும்பியுள்ளார். பென்னியின் பெற்றோரிடம் மகள் குறித்து கேட்ட போது, அவர் உடல்நிலை சரியானவுடன் நாங்களே அனுப்பி வைக்கிறோம் என்று கூறியுள்ளனர்,

இதையடுத்து ஊர் திரும்பிய தனுஷ்கோடி தன்னுடைய தந்தைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பென்னி என்னுடன் வரவில்லை அப்பா, அவள் பெற்றோர் வீட்டில் இருக்கிறாள்.

பென்னியின் பெற்றோர் பேசியதை கவனிக்கும் போது, அவளையும், என்னையும் பிரித்துவிடுவார்கள் என்பது போல் தெரிகிறது, அவள் மீது நிறைய அன்பு வைத்துள்ளே, அவள் இல்லாத வாழ்க்கை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது, நான் தற்கொலை செய்ய போகிறேன் என்று கூற தொலைபேசியை துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை உடனடியாக தன்னுடைய உறவினர்களுடன் மகனை தேடிய போது, கிடைக்காத காரணத்தினால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், சின்னசேலத்திலிருந்து அம்மையகரம் செல்லும் வழியில் உள்ள ரயில்வே கேட் அருகே இருந்து தனுஷ்கோடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அப்போது தனுஷ்கோடி திருமணத்திற்கு கட்டிய பட்டு வேட்டியுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்