கண் வலியால் தவித்த முதியவர்: மருத்துவரை நாடியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கண்ணில் இருந்து 3 அங்குல நீளம் கொண்ட ஒட்டுண்ணி புழுவை அப்புறப்படுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த புழுவானது அந்த விவசாயின் கண்ணில் சுமார் 12 ஆண்டுகளாக வாழ்ந்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.

மும்பை மாநகரம் அருகே விரார் நகரில் குடியிருந்து வருபவர் 70 வயதான ஜஷூ பட்டேல். இவர் கடந்த 2 மாதங்களாக கண் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

பல மருத்துவர்களை நாடியும் இவரது கண் வலிக்கு நிரந்தர தீர்வு எட்டாமல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் மருத்துவர்கள் குழு ஒன்று குறித்த விவசாயியை தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது.

அதில் அந்த 70 வயது நபரின் வலப்பக்க கண்ணில் ஒட்டுண்ணி நெளிவதை கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து சுமார் 25 நிமிட அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்த புழுவை அப்புறப்படுத்தியுள்ளனர்.

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த விவசாயியை நாய் கடித்ததாகவும், அதுவே அவரது ரத்தம் மூலம் இந்த புழு அவரது உடம்பில் புகுந்தது என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

காலதாமதம் ஏற்பட்டிருந்தால், குறித்த புழுவானது அவரது மூளையை பதம் பார்த்திருக்கும் எனவும் மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்