சூழ்நிலை ஏற்பட்டால்... கமல் தொடர்பில் ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

மக்களின் நலன் கருதி கமலுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் இணைவோம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளது தேசிய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்.

தமிழக நலனுக்காக சேர்ந்து பயணிக்க வேண்டிய நிலை வந்தால் இணைந்து பயணிப்போம். ஓபிஎஸ் எனக்கு கண்டனம் தெரிவித்தது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதுகுறித்து பதில்கூற விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், தமிழகத்தின் மேம்பாட்டிற்காக ரஜினியுடன் இணையும் சூழல் வந்தால் இணையத்தயார்.

நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்