அக்கா மகள் இறந்துவிட்டதாக நினைத்து தற்கொலை செய்துகொண்ட இராணுவ வீரர்

Report Print Vijay Amburore in இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் அக்கா மகளை துப்பாக்கியால் சுட்டுவிட்டு இராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்வபம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரூபீந்தர் கவுர் (30) என்கிற பெண், மொஹல்லா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து சொந்தமாக அழகுநிலையம் ஒன்றினை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 17ம் திகதியன்று, இவருடைய வீட்டில் அடுத்தடுத்து இரண்டு முறை துப்பாக்கிசுடும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், கதவை திறந்தபோது ஒரு ஆணுடன், ரூபீந்தர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

உடனடியாக இருவரையும் மீட்டு பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிங் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், ரூபீந்தர் கவுர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கூறியுள்ள பொலிஸார், ரூபீந்தர் கவுர் இராணு வீரரான சிங் என்பவரின் அக்கம் மகள். சிங்கிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்டது.

சிங் 17ம் திகதி இரவு, ரூபீந்தரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சிங் திடீரென துப்பாக்கியை எடுத்து ரூபீந்தரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ரூபீந்தர் தரையில் சுருண்டு விழுந்ததும், இறந்துவிட்டதாக நினைத்த சிங் துப்பாக்கியை தன்னுடைய தலையில் வைத்து சுட்டுள்ளார் என கூறியுள்ளனர்.

ஆனால் இருவரும் என்ன காரணத்திற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்