இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு பின்னர் சீமான் முதல் முறையாக வெளியிட்டுள்ள அறிக்கை

Report Print Raju Raju in இந்தியா

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல் முறையாக அது குறித்து சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர், சிங்களர் எனும் இரு இனங்களிடையே தமிழக அரசியல் தலைவர்கள் பகைமையையும், துவேசத்தையும் உண்டாக்குவதாக மகிந்தா ராஜபக்‌ஷவின் மகனும், இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ கூறியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

சிங்கள இனவாதிகளுக்கு இடையேயானப் போட்டியில் எவர் வென்றாலும் அது தமிழர்களுக்கு எவ்விதப் பலனையும் தரப்போவதில்லை என்பதே மறுக்கவியலா உண்மை.

இதனைத் தெளிவாக உணர்ந்தே ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணித்திருக்கிறார்கள் எமது மக்கள். எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் களத்தில் நின்றபோதே அவரது முடிவை ஏற்று தேர்தல் புறக்கணிப்புச் செய்திருக்கிறார்கள் ஈழச்சொந்தங்கள்.

தற்போதும் அதனைப் போலவே, தேர்தலைப் புறக்கணித்து, இவ்வதிகாரம் எமக்கானதல்ல; எம்மை அடிமைப்படுத்தி ஆளுகிற அதிகாரத்தைத் தமிழர்கள் நாங்கள் அங்கீகரிக்க விரும்பவில்லை என்பதைக் கூறும்விதமாகப் புறக்கணிப்பு மூலமாக உலகுக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

தமிழினப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தி இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த இனப்படுகொலையாளன் மகிந்தா ராஜபக்‌ஷவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருப்பது தமிழர்களுக்கு ஒரு இருண்டகாலமாகும்.

இந்த ஆட்சி மாற்றம் பெரும் அச்சுறுத்தலையும், கலக்கத்தையும் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது என்றால், அது மிகையில்லை.

கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்றவுடனே தனக்கு வாக்களிக்காத தமிழர்கள் மீது தனது ஆதரவாளர்களை ஏவித்தாக்குதல் நடத்தத் தொடங்கி இருப்பதாக வரும் செய்திகளைப் பன்னாட்டுச் சமூகத்திற்கும், இந்தியச் சமூகத்திற்கும் சுட்டிக்காட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

சீமானின் முழு அறிக்கை,

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்