ஒரு விளக்கம் அளிக்க‌ வேண்டும்.... குழந்தை கடத்தல் புகாருக்கு நித்தியானந்தா பதில்

Report Print Arbin Arbin in இந்தியா

நித்யானந்தா ஆசிரமத்தில் குழந்தைகளை கடத்தி வைத்துள்ளதாக கூறி அவரது ஆசிரம நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த புகாருக்கு நித்யானந்தா தற்போது விளக்கமளித்துள்ளார்.

நடிகை ரஞ்சிதா உடனான படுக்கை அறை காணொளி சர்ச்சை தொடங்கி, தற்போது குழந்தைகளை நித்தியானந்தா கடத்தியதாக இந்திய மாநிலம் குஜராத்திலிருந்து புகார் எழுந்தது.

குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள நித்யானந்தா அந்த புகார்களுக்கு விளக்கமும் அளித்துள்ளார்.

இணையம் ஊடாக பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றிய நித்யானந்தா, நான் ஒரு விளக்கம் அளிக்க‌ வேண்டும். எனது அனைத்து குருகுலத்திலும் அனைத்து பெற்றோர்களுக்கும் அவர்களது குழந்தைகளிடமும் எப்போது வேண்டுமானாலும் பேச அனுமதி உள்ளது.

ஆனால், எனது அனைத்து குருகுலமும் எப்போதும் திறந்தே இருக்கும்‌. நிறைய பெற்றோர்கள் எனது ஆசிரமத்திலேயே தங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த பல மாதங்களாக இணையம் ஊடாக மட்டுமே பக்தர்களுக்கு சொற்பொழிவாற்றி வரும் நித்யானந்தா, வெளிநாட்டில் பதுங்கியிருப்பதாகவும், இதனால் இணையம் ஊடாக மட்டும் சொற்பொழிவாற்றி வருவதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்