கைகளில் இருந்து நழுவிய கிரிக்கெட் மட்டையால் பரிதாபமாக பறிபோன உயிர்!

Report Print Vijay Amburore in இந்தியா

பள்ளியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது மட்டை நழுவி தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்..

கேரளாவில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வகுப்பறையில் இருந்த சிறுமியை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மாநிலங்களின் பல இடங்களிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதிலிருந்து அரசு இன்னும் மீளாத நிலையில், பள்ளியில் கிரிக்கெட் மட்டை தாக்கியதில் மற்றொரு சிறுவன் உயிரிழந்துள்ளான்.

கேரளாவின் மவ்லிகேராவில் உள்ள சுனகர உயர்நிலைப்பள்ளியில் சிறார்கள் சிலர் மதிய வேளையில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது 6 ஆம் வகுப்பு மாணவர் நவநீத், உணவை முடித்துவிட்டு கைகழுவ சென்றுகொண்டிருந்துள்ளான். எதிர்பாராமல் சிறுவனின் கைகளில் இருந்து தவறிய கிரிக்கெட் மட்டை நவநீத்தின் பின் தலையில் பலமாக தாக்கியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த சிறுவனை உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக மாணவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்