டிக்டாக்கில் தாயும், பிள்ளையுமாக நடித்த இரு தமிழக இளம் பெண்களுக்கு நேர்ந்த கதி! ஒரு எச்சரிக்கை செய்தி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் டிக் டாக்கில் தாயும், பிள்ளையுமாக நடிப்புத்திறமையை காட்டிய இரண்டு பெண்கள் வீட்டை விட்டு துரத்தப்பட்டு தற்போது அனாதையாக தவிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த தோழிகளான மீனாட்சியும் கயலும் பாரம்பரிய உடையான சேலையுடன் டிக்டாக்கில் தோன்றி தாயும் பிள்ளையுமாக நடிப்புத்திறமையை வெளிக்காட்டுவது வழக்கம்.

இருவருக்கும் திருமணமான நிலையில் டிக்டாக் செயலிக்கு அடிமையானதால் அவ்வப்போது ஆன்மீகம், நையாண்டி, நகைச்சுவை போன்ற வீடியோக்களையும் டிக்டாக் செயலியில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், மீனாட்சிக்கு டிக்டாக் மூலம் தேனியைச் சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது.

ஒரு கட்டத்தில் சுகந்திக்கும் மீனாட்சிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு டிக்டாக் செயலியில் நட்பை துண்டித்து கொண்டனர்.

மீனாட்சியுடனான நட்பு துண்டானதும் ஆத்திரம் அடைந்த சுகந்தி, தனது ஆண் நண்பர் செல்வா என்பவருடன் சேர்ந்து மீனாட்சி மற்றும் தோழி கயல் ஆகியோரின் டிக்டாக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, இருவரையும் விலை மாதர்களாக சித்தரித்து டிக்டாக் செயலியில் பதிவிட்டதால் இருவரது குடும்பத்திலும் புயல்வீசத் தொடங்கியது.

கயலின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் அவர் சேலையை கிழித்து வீட்டை விட்டு துரத்தியதால் தற்போது காப்பகத்தில் தவித்து வருகிறார். மீனாட்சிக்கும் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது

இது குறித்து இருவரும் பொலிசில் புகார் அளித்த நிலையில் பொலிசார் சுகந்தி, செல்வா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து பொலிஸ் பிடியில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெற்ற சுகந்தியிடம் இரு செல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், டிக்டாக், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு வருடம் கருத்து பதிவிட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குடும்பப் பெண்கள் பலர் பொழுதுபோக்கு என்ற பெயரில் முழுநேரமாக டிக்டாக்குக்கு அடிமைகளாகி வருவதால் தங்கள் வாழ்க்கையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்