இருட்டு அறையில் சிறுமிகள் கொடுமைப்படுத்தப்படுவதாக கூறப்படும் நிலையில் நித்தியானந்தா வெளியிட்ட புதிய வீடியோ!

Report Print Raju Raju in இந்தியா

சர்ச்சை நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் சாமியார் நித்தியானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குஜராத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. அங்குள்ள சிறுமிகள் இருட்டு அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்படுவதாகவும், பலர் கடத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பொலிசார் நித்தியானந்தா மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என கருதப்பட்டது.

இந்த சூழலில் நான் வெளிநாட்டுக்கு செல்லவில்லை, இமயமலையில் உள்ளேன் என சாமியார் கூறினார்.

ஆனால் பிரச்சனைக்கு மேல் பிரச்னை வந்தாலும், எத்தனை பெரும் சர்ச்சையில் சிக்கினாலும், என்ன தான் நடக்கட்டும், நடக்கட்டுமே என அமைதியாக சொற்பொழிவாற்றி வருகிறார் நித்தியானந்தா.

இந்நிலையில் சர்ச்சை மேகங்கள் தன்னை சூழ்ந்திருப்பது குறித்து சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் ஜாலியாக பேசியிருக்கிறார், நித்தியானந்தா.

அதில் தான் பேசும் தமிழ் யாருக்குமே புரியவில்லை என கிண்டலடித்திருக்கும் அவர், அதை புரிந்து கொள்ளாமல் காவல்துறை வழக்குப்பதிவு செய்துவிடுவதாக ஒருமையில் எள்ளி நகையாடியிருக்கிறார்.

காவல்துறையையே கிண்டலடித்து சிரிப்பு பொங்க பேசியிருக்கும் நித்தியானந்தா, தமிழகத்தில் ஏதேனும் ஒரு பிரச்னையை திசை திருப்ப வேண்டுமென்றால், அதற்கு தாம் மட்டுமே குறிவைக்கப்படுவதாக கூறி, பல புதிர்களை போட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்