கணவன் மாயம்... மாமியாரை திட்டம் போட்டு கடத்திய மருமகள்! பொலிசாரிடம் சொன்ன காரணம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மறைந்த அதிமுக பிரமுகரின் மனைவி பத்மினியை அவரது மருமகளே சொத்திற்காக கடத்தி சென்று அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள படப்பையை சேர்ந்தவர் பத்மினி(70). இவர் மறைந்த அதிமுக பிரமுகர் சுப்பராயனின் மனைவி ஆவார். இவருக்கு செந்தில், ராஜு என 2 மகன்கள் உள்ளனர்.

இரண்டு பேருக்கும் திருமணம் ஆகிவிட்டதால், இருவரும் தனித்தனியே வசித்து வந்துள்ளனர். இருப்பினும் பத்மினிக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் 10க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் இருப்பதால், சொத்து தகராறு காரணமாக மகன்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டுகிறது.

இந்த சொத்துக்காக இளையமகன் ராஜ்குமார் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், மூத்த மகன் செந்திலை அப்போதிருந்தே காணவில்லை.

மேனகா

இந்நிலையில், செந்தில் மனைவி மேனகா, 5 கோடி ரூபாய் சொத்துக்காக மாமியார் பத்மினியை துப்பாக்கியை காட்டி மிரட்டி, ஆள்வைத்து கடத்தி, அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தத நிலையில், பொலிசார் மேனகாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மேனகா அளித்த வாக்குமூலத்தில், என்னுடைய சொந்த ஊர் பெரியபாளையம் அருகே இருக்கும் கொமக்கம்பேடு கிராமம். எனக்கு செந்திலுடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.

என் மாமனார் சுப்பராயன் கான்ட்ராக்ட் வேலை பார்த்து வந்தார். அவருக்கு உதவியாக என் கணவர் இருந்தார். ஆனால் சொத்துக்களை பிரிக்கும்போது, முக்கியமான இடம் ஒன்றைஎன் கொழுந்தனார் ராஜ்குமாருக்கு மாமனார் தந்துவிட்டார்.

இது குறித்து செந்தில் கேட்ட போது, வாக்குவாதம் முற்றியதால், இது கொலையில் போய் முடிந்துவிட்டது. இதன் காரணமாக என் கணவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் எல்லாம் கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்தது.

கணவர் சிறைக்கு சென்ற பின் எனக்கு ஆதரவாக டிரைவர் ராஜேஷ் கண்ணாவின் மனைவி இருந்தார். சிறையில் இருந்த என் கணவன் செந்தில் ஜாமீனில் இருந்து வெளியே வந்தார்.

ஆனால், வெளியே வந்த அவர் வீட்டிற்கு வரவில்லை, அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. 2018-ல் என் மாமனாரையும் கொலை செய்த வழக்கில் எனக்கு உதவி செய்த ராஜேஷ் கண்ணாவை பொலிசார் கைது செய்தனர்.

இதையடுத்து மீதமிருக்கும் சொத்துக்களை வாங்கவே, என் மாமியாரை வீட்டிற்கு அழைத்து சென்றேன். அவரை கடத்தவில்லை, மிரட்டவில்லை என்று மேனகா பொலிசாரிடம் கூறியுள்ளார்.

கடத்தவில்லை, மிரட்டவில்லை என்றால் அவர் ஏன் சத்தம் போட வேண்டும்? எங்களுக்கு புகார் அளிக்க வேண்டும் என்ற கேள்விக்கு மேனகா சரியான பதில் அளிக்காத்தால், பொலிசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மருமகள் மேனகாவிடமிருந்து மீட்கப்பட்ட பத்மினி கூறுகையில், என்னை மேனகா சொத்துக்காக கடத்தினாள், கையெழுத்து போடும் படி சிலரை வைத்து மிரட்டினாள்.

பத்மினி/மேனகா

மொத்தம் 3 நாட்கள் என்னை அடைத்து சித்ரவதை செய்தாள். பகல் நேரத்தில் காட்டுப் பகுதி பக்கம் அழைத்து சென்றுவிடுவார்கள். இரவு நேரத்தில், ஒரு இருட்டு அறையில் அடைத்து வைப்பார்கள்,அப்போது அவர்கள் எனக்கு சாப்பிட இட்லி, டீ கொடுப்பார்கள், ஆனால் அதில் விஷம் இருக்குமோ என்ற பயத்தில் நான் சாப்பிடவில்லை.

இந்த சொத்துக்காக என் கணவன், 2-வது மகனை பறிகொடுத்துட்டேன். முதல் பையன் செந்தில் எங்கே இருக்கான் என்றே தெரியவில்லை என்று வேதனையுடன் கண்கலங்கிய படி கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்