பெற்ற தாய்க்கு கோவில் கட்டி வியக்க வைத்த மகன்.. நேற்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் தாய்க்கு கோவில் கட்டிய மகன் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியின் திருவெறும்பூரை சேர்ந்தவர் ராஜராஜசோழன். வழக்கறிஞராக இருந்தார்.

இவர் தாய் அமுதா உயிரிழந்துவிட்ட நிலையில் கடந்தாண்டு அவருக்கு ராஜராஜசோழன் கோவில் கட்டினார்.

இதோடு அமுதாவுக்கு சிலை திறப்பு விழாவை விமர்சையாக நடத்தினார்.

இந்நிலையில் ராஜராஜசோழனும் அவர் மகன் சேரலாதனும் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த போது நின்று கொண்டு இருந்த லொறி மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வழக்கறிஞர் ராஜராஜசோழன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் மகன் சேரலாதனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த கோர விபத்து சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்