ராஜீவ்காந்தி கொலை வழக்கு... பரோலில் வெளி வந்த பேரறிவாளன் செய்த செயல்! வைரலாகும் வீடியோ

Report Print Santhan in இந்தியா

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சகோதரியின் திருமணத்திற்காக பரோலில் வந்த அவர் பறை இசை ஆடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியாக 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், இரண்டாவது முறையாக இரண்டு ஆண்டுக்கு பின் பரோலில் கடந்த 12- ஆம் திகதி தமிழக அரசின் உத்தரவின்படி வெளியே வந்தார்.

தந்தையின் உடல்நிலையை கவனித்துக்கொள்ளவும், தனது சகோதரி அன்புமணி ராசாவின் மகள் திருமணத்தில் கலந்துக்கொள்ளவும் அவர் அனுமதி கேட்ட நிலையிலேயே அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பேரறிவாளனின் சகோதரி அன்புமணியின் மகள் செவ்வை - கவுதமன் திருமணம் கிரு‌‌ஷ்ணகிரியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்று நடந்தது.

இதையொட்டி நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பேரறிவாளன் நேற்று மாலை கிரு‌‌ஷ்ணகிரிக்கு வந்தார்.

20-க்கும் மேற்பட்ட பொலிசார் பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்து வந்தனர். அங்கு மணமக்களை பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள் மற்றும் குடும்பத்தினர் வாழ்த்தியதை தொடர்ந்து, பேரறிவாளன் அந்த திருமணத்தில் பறை இசை அங்கிருந்த குழுவினருடன் மகிழ்ச்சியாக வசித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்