ஓபிஎஸ்ஸை பார்த்து நீங்கள்ளாம் ஆம்பிளையா என்று கேட்டேன்... ‘தர்மயுத்தம்’ ரகசியத்தை போட்டு உடைத்த குருமூர்த்தி!

Report Print Basu in இந்தியா

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் ரகசியத்தை துக்ளக் வார இதழின் ஆசிரியர் குருமூர்த்தி போட்டு உடைத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவை அடுத்து தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க ஏற்பாடுகள் செய்து வந்த நிலையில், அப்போதைய தமிழக முதல்வர் மெரினாவில் ஜெயலலிதா சமாதி முன் தியானம் செய்தார்.

தியானத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், முதல்வர் பதவியை ராஜினமா செய்வதாகவும், சசிகலா தலைமையை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்குவதாக அறிவித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு பின் அஇஅதிமுக-வில் பல மாற்றங்கள், எதிர்பாராத திருப்பங்கள் நடந்த நிலையில் தற்போது தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வராக ஓ.பன்னீர் செல்வமும் பதவி வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட துக்ளக் வார இதழின் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது, ஜெயலலிதா மறைவை அடுத்து, சசிகலாவை முதல்வராக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டனர்.

சென்னை பல்கலைக்கழக அரங்கில் அனைத்து ஏற்பாடுகளும் நடந்துக்கொண்டிருக்கிறது. அப்போது, முதல்வர் ஓபிஎஸ்ஸை அரங்கில் ஏற்பாடுகள் மற்றும் துப்புரவு பணிகளை மேற்பார்வை செய்யுமாறு கூறி அனுப்பியுள்ளனர்.

உடனே அவர் என்னிடம் வந்தார், சார்.. இந்த மாதிரிலாம் பண்றாங்க எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என புலம்பினார்.

அப்போது, நான் அவரிடம் பேசிய முறையை வெளியே கூற முடியாது, நீங்கள்ளாம் ஆம்பிளையா ஏன் இருக்கீங்க என்று கேட்டேன்.

என்ன சார் பண்லாம் என்று ஓபிஎஸ் என்னிடம் கோட்டார். நீங்கள் போய் ஜெயலலிதா சமாதியில் உட்காருங்கள் வழி பிறக்கும் என்றேன் என துக்ளக் வார இதழ் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்