வெளிநாட்டில் இருந்து விமானத்தில் சென்னை வந்த பெண்! மருத்துவ பரிசோதனையில் சடலமாக இருந்தது கண்டுபிடிப்பு

Report Print Raju Raju in இந்தியா

குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை சேர்ந்தவர் மொய்தீன் பீ பவாதீன் (65).

இவர் குவைத்தில் சில காலம் இருந்த நிலையில் அங்கிருந்து நேற்று நள்ளிரவு விமானம் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது தனது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமானத்தில் இருந்த ஊழியர்களிடம் பவாதீன் கூறினார்.

இதையடுத்து பவாதீன் உடல்நிலை குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தரப்பட்டது.

தகவல் கிடைத்ததை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் மருத்துவ குழுவினர் பவாதீனுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருந்தனர்.

விமானம் வந்து தரை இறங்கியதும் பவாதீனை மருத்துவர்கள் பரிசோதனை செய்தார்கள்.

ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது அப்போது தெரியவந்தது.

விமானத்தில் பயணிக்கும் போது உடல் சுகவீனமாக உள்ளது என கூறிய பவாதீன் உயிர் சரியாக எப்போது பிரிந்தது என்பது குறித்த விபரம் இன்னும் தெரியவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers