பிரியங்காவின் கொடூர மரணம்: விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கி எரித்துக் கொல்லப்பட்ட இளம்பெண் பிரியங்கா வழக்கு தொடர்பில் விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா நேற்று மர்ம நபர்களால் எரித்துக் கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை நால்வரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், பிரியங்கா ரெட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை தற்போது விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், கொலை செய்வதற்கு முன்பு பிரியங்காவை அதிக சித்திரவதை செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

கழுத்தை நெரிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கான அடையாளம், தலையில் பலத்த காயங்கள் இருந்தன என பிரியங்காவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இது ஒரு திட்டமிடப்பட்ட கற்பழிப்பு மற்றும் கொலை என்று கூறப்படுகிறது. அதற்கு காரணமாக, கைதான லொறி சாரதி மற்றும் அவரின் உதவியாளர்களின் நடவடிக்கைகள்தான் என விசாரணை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரியங்கா வெகுநேரமாக தனியாக டோல்-பிளாசாவில் நின்றுகொண்டிருப்பதை கண்காணித்துக்கொண்டிருந்த குற்றவாளிகள், தொடர்ந்து அவர் என்ன செய்கிறார் என்பதை உன்னிப்பாக கவனித்த வண்ணம் இருந்துள்ளனர்.

இந்தக் காட்சிகள் கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது. பின்னர் அவருக்கு உதவுவது போல் அவர்கள் நடித்து ஸ்கூட்டர் டயரில் காற்றை அகற்றும் நோக்கத்துடன் செயல்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த வழக்கை ஷம்ஷாபாத் டிஜிபி பிரகாஷ் ரெட்டி தலைமையில் 15 பேர் கொண்ட குழு விசாரித்து வருகிறது.

டோல் கேட் அருகே அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கமெரா காட்சிகளையும் ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு இடையேவும் சில ஆதாரங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

சேகரிக்கப்பட்ட இரண்டு வீடியோக்களில் பிரியங்கா தனியாக டோல் கேட்டை நோக்கி செல்வதும், மற்றொன்றில் அவர் அடையாளம் தெரியாத நபருடன் பேசுவதும் பதிவாகியுள்ளது.

டோல் பிளாசாவிலிருந்து சிறிது தூரத்தில் பிரியங்காவின் உடைகள், செருப்பு மற்றும் மதுபான பாட்டில்களையும் பொலிசார் மீட்டுள்ளனர். இந்த ஆதாரங்களை வைத்து லொறியில் வைத்தே பிரியங்கா பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் எனப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கைது செய்யப்பட்ட நால்வரையும் தற்போது தனியான இடத்தில் வைத்து விசாரித்தது வருகின்றனர்.

அவர்கள் தெரிவிக்கும் வாக்குமூலத்தை பொறுத்தே பிரியங்காவுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவரும் என்கின்றனர் விசாரணை அதிகாரிகள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்