பிரியங்காவை கொன்ற முக்கிய குற்றவாளி நள்ளிரவு வீட்டுக்கு வந்து செய்த செயல்... அதிர்ச்சியுடன் விளக்கிய தாயார்

Report Print Raju Raju in இந்தியா

பிரியங்கா ரெட்டியை கொலை செய்தவர்களில் முக்கிய குற்றவாளியான முகமது பாஷா சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டுக்கு வந்து நடத்திய நாடகம் குறித்து அவன் தாயார் அதிர்ச்சி விலகாமல் பேசியுள்ளார்.

ஹைதராபாத்தின் Shadnagar பகுதியை சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டி வியாழன் காலை கருகிய நிலையில் பாலத்தின் அடியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

விசாரணையில் அவர் கற்பழித்து எரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக முகமது பாஷா, ஜோலு ஷிவா, ஜோலு நவீன் மற்றும் சின்னகேஷவலு ஆகிய நால்வரை பொலிசார் கைது செய்தனர்.

நால்வரும் லொறி ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்களாக இருக்கின்றனர். இந்த நால்வரில் முக்கிய குற்றவாளியான முகமது குறித்து அவன் பெற்றோர் பேசியுள்ளனர்.

முகமது தாய் கூறுகையில், சம்பவத்தன்று நள்ளிரவு 1 மணிக்கு முகமது வீட்டுக்கு வந்தான்.

ஸ்கூட்டி மீது தனது லொறி மோதி விபத்து ஏற்பட்டதாகவும், அதனால் தான் வீட்டுக்கு வர தாமதம் ஆனதாகவும் கூறிவிட்டு தூங்க சென்றுவிட்டான்.

அவன் செய்த குற்றச்செயல் குறித்து எனக்கும், என் கணவருக்கு கொஞ்சம் கூட தெரியாது, அவனை பொலிசார் கைது செய்த போது எங்களுக்கு ஏன் கைது செய்கிறார்கள் என புரியவில்லை.

முகமதின் மூன்று நண்பர்களும் அவன் வீட்டில் இருக்கும் சமயத்தில் அடிக்கடி வருவார்கள் என கூறினார்.

முகமது தந்தை கூறுகையில், என் மகன் சாதாரணமாகவும், நல்லவனாகவும் தான் இருந்தான். இந்த குற்றத்தை அவன் செய்திருந்தால் இது தான் அவன் செய்துள்ள முதல் குற்றமாக இருக்கும்.

முகமது மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவன் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்