என் மகனை ஒன்றும் செய்ய முடியாது! பிரியங்கா வழக்கில் கைதான 17 வயது சிறுவனின் தந்தை அதிர்ச்சி பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான ஷிவாவின் தந்தை அளித்துள்ள பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கற்பழிக்கப்பட்டு பின்னர் எரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக முகமது பாஷா, நவீன், ஷிவா, கேஷவலு ஆகிய நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதில் ஷிவா உள்ளிட்ட இரண்டு பேர் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள். அதிலும் ஷிவாவின் வயது 17 என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஷிவாவின் தந்தையின் வீட்டுக்கு சென்ற தனியார் தொலைக்காட்சி நிரூபர் அவரிடம் சம்பவம் தொடர்பில் பேட்டி எடுத்தார்.

அப்போது பேசிய ஷிவாவின் தந்தை, என் மகன் ஷிவாவுக்கு 17 வயது தான் ஆகிறது.

அதனால் என் மகனை யாரும் எதுவும் செய்ய முடியாது, அவனுக்கு எதுவும் நடக்காது என கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் குற்றம் செய்தவர்களுக்கு வயது வித்தியாசம் பார்க்காமல் தண்டனை அளிக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்