நள்ளிரவில் நடந்த பயங்கரம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கழுத்தறுத்து கொலை..!

Report Print Vijay Amburore in இந்தியா

நள்ளிரவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை மர்ம நபர்கள் கழுத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் தர்காடா என்ற கிராமத்தை சேர்ந்த பரத் பாய் பலஸ் (40) என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 6 பேரும், வெள்ளைக்கிழமை காலை மர்மமான முறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலமாக கிடந்த 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், பரத் பாய் பலஸ் தன்னுடைய மனைவி சமீபன் (38) மற்றும் குழந்தைகள் தீபிகா பரத்பாய் (12), ஹேம்ராஜ் (10), தீபேஷ் (8), ரவி (6) ஆகிய நான்கு பேருடன் பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தார்.

காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்தபோது, ஐந்து பேரின் இரத்தம் சிந்திய உடல்கள் வீட்டில் கிடந்தன. பரத்பாயின் உடல் பண்ணையில் கிடந்தது.

அவர்கள் அனைவரின் கழுத்து பகுதி, கத்தி அல்லது ஏதேனும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தது. கொள்ளையடித்ததற்கான எந்த காரணிகளும் அங்கு கிடைக்கவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட சிலர் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருக்க வேண்டும்.

பரத் பாய் வீட்டில் கொலை செய்யப்பட்டு அதன்பிறகே அவருடைய உடல் பண்ணைப்பகுதிக்கு இழுத்து சொல்லப்பட்டிருக்கிறது எனக்கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்