பிரியங்கா பேசிய கடைசி வார்த்தை... மகளை என்னிடம் இருந்து பிரித்தவர்களை நிற்க வைத்து எரிக்க வேண்டும்: தாயார்!

Report Print Abisha in இந்தியா

கால்நடை மருத்துவர் பிரியங்கா கொலை சம்பவத்தில், அவர் தாயார் தனது மகள் கடைசியாக பேசியது என்ன என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

ஹைதராபத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா நான்குபேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக பலர் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து பேசிய பிரியங்காவின் தாயார், பிரியங்கா இரவில் அழைத்தார், ”எத்தனை மாத்திரை வாங்க வேண்டும் என்று கேட்டார். அதன்பின் பசிக்கிறது பழங்கள் எடுத்து வையுங்கள்” என்றார். அப்போது, நான் அவர் கடையில் இருக்கிறார் என்றுதான் நினைத்தேன்.

அதுதான் நான் கேட்ட கடைசி வார்த்தை. அடுத்த சில நிமிடங்களில் என் இளைய மகள் எனக்குப் அலைப்பேசியில் அழைத்து, `அக்கா வந்துவிட்டாளா’ எனக் கேட்டாள். இல்லை எனக் கூறினேன். நேரம் செல்லச் செல்ல எனக்கு பயம் அதிகரித்தது.

வாசலிலேயே நின்று அவர் வருவாளா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போ இரண்டாவது மகள், நண்பருடன் வந்து பிரியங்காவை குறித்து விசாரித்தார். அப்போது தான் வண்டியை பற்றிய விஷயம் எனக்கு தெரிந்தது.

பிரியங்கா வரவில்லை என்றதும், இளைய மகள் அவரை தேடி சென்றாள். 10:40வரை தேடியும் கிடைக்காததால் திரும்ப வந்துவிட்டனர். 11மணிக்கு ஷம்ஷாபாத் விமானநிலையத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தோம் அது எங்கள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வராது என்று திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து மீண்டும் அவர்கள் கூறிய காவல் நிலையம் சென்றோம் அங்கு எங்களை மிகவும் மோசமாக நடத்தினர்.

இறுதியாக வீட்டை விட்டுப் புறப்படும்போது, விரைவில் வந்துவிடுவதாக என் மகள் தெரிவித்துவிட்டுச் சென்றாள். ஆனால், அவளைப் பெட்டியில் வைத்துத்தான் இறுதியாகப் பார்க்க முடிந்தது. விபத்து போன்ற ஏதாவது நடந்திருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், அவளுக்கு இப்படியொரு கொடூரம் நடக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

அந்த இறுதி நேரத்தில் என் மகள் எவ்வளவு துன்பத்தை அனுபவித்திருப்பாள். அதே துன்பத்தைக் குற்றவாளிகளும் அனுபவிக்க வேண்டும். என் மகளை என்னிடமிருந்து பிரித்தவர்களை நடுரோட்டில் நிற்கவைத்து உயிருடன் எரிக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்