பிரியங்கா வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் தொடர்பில் நீதிபதி அளித்துள்ள உத்தரவு

Report Print Raju Raju in இந்தியா

பிரியங்கா ரெட்டி வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹைதராபாத்தின் ஷித்நகரை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற பெண் மருத்துவர் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதோடு எரித்து கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக முகமது பாஷா, நவீன், ஷிவா, கேஷவலு ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இரண்டு பேர் 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் என தெரியவருகிறது.

இந்த சூழலில் நான்கு பேரும் உள்ள ஷித்நகர் காவல்நிலையத்தை சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதன் காரணமாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

இதை தொடர்ந்து அங்கு வந்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நால்வருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

பின்னர் நீதிபதி அந்த காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

அங்கு நால்வரும் நீதிபதி முன்னால் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க அவர் உத்தரவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்