குளிர்பானத்தில் மது கலந்து... கழுத்தை நெரித்து: பிரியங்காவின் நடுங்கவைக்கும் கடைசி நிமிடங்கள்!

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் பொலிசாருக்கு மற்றொரு முக்கிய துப்பு கிடைத்துள்ளது.

ஐதராபாத் நகரில் 26 வயதான கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கொடூர கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொலை தொடர்பில் முக்கிய குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு இதுவரை நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கூட்டு வன்புணர்வுக்கு இரையாக்கும் முன்னர் குளிர்பானத்தில் மது கலந்து வலுக்கட்டாயமாக பிரியங்காவை குடிக்க வைத்துள்ளனர்.

ஷம்ஷாபாத் டோல் பிளாசாவுக்கு அருகே, ஐதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வைத்து, புதனன்று இரவு பிரியங்கா லொறி சாரதிகள் மற்றும் உதவியாளர்கள் என மொத்தம் நால்வரால் கூட்டு வன்புணர்வுக்கு இரையானார். பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் தொடர்பில் கைதான நால்வருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரியங்காவுக்கு நடத்தப்பட்ட உடற்கூராய்வில் முக்கிய தகவல் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த நால்வர் கும்பலானது மருத்துவர் பிரியங்காவை திட்டமிட்டு கடத்தியபின்னர், ஷம்ஷாபாத் டோல் பிளாசாவுக்கு அருகிலுள்ள டோண்டுபள்ளி கிராமத்தில் இருந்து ஒன்றரை போத்தல் மது, நொறுக்குத் தீனிகள் மற்றும் குளிர் பானம் வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நால்வரும் பலாத்காரம் செய்த நேரத்தில் குடிபோதையில் இருந்துள்ளனர்.

அவர்கள் பிரியங்காவை சீரழிக்கும்போது வாய் மற்றும் மூக்கை மூடியுள்ளனர். அதனால் மூச்சு திணறி, பிரியங்கா இறந்தார் என்று சைபராபாத் பொலிஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

இதன்பிறகுதான், லொறியில் இருந்த பெட்ரோல் எடுதுச் சென்று, பிரியங்கா உடலை எரித்துள்ளனர். இந்த கொடும்செயலில் ஈடுபட்ட பிறகு, முகமது ஆரீப், மற்ற குற்றவாளிகளை அரம்கர் எக்ஸ் சாலை அருகே இறக்கிவிட்டு, நாராயன்பேட்டையில் உள்ள தனது குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

மட்டுமின்றி, பிரியங்கா ரெட்டியின் இருசக்கர வாகனம் டோல் பிளாசாவிலுள்ளோருக்கும், பிரதான சாலையில் செல்வோருக்கும், தெரிந்துவிட கூடாது என்பதற்காக தங்கள் லொறியை வேண்டுமென்றே குறுக்கே நிறுத்தி வைத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்