12 பேர் கொண்ட கும்பலால் சட்டக்கல்லூரி மாணவிக்கு நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் கடத்தி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் 12 பேர் கொண்ட கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி புறநகர் பகுதியில் மாலை நேரத்தில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது 12 பேர் கும்பலாக பயங்கர ஆயுதங்களுடன் வந்து அவர்களை வழிமறித்துள்ளனர். பின்னர் ஆண் நண்பரை தாக்கி விரட்டியடித்த அவர்கள், மாணவியை கடத்திச் சென்றுள்ளனர்.

அருகில் இருந்த ஒரு செங்கல் சூளையில் வைத்து மாணவியை அவர்கள் கூட்டாக சீரழித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மட்டுமின்றி அவர்கள் பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள், ஒரு கைத்துப்பாக்கி, 8 செல்போன்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒரு செல்போன் உள்ளிட்டவையை பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்..

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...